Abstract:
சிறுபான்மையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒழித்ததைப் பொறுத்து ஐ .தே .க .யின் அரசியலமைப்பும் ஸ்ரீ.ல.சு.க யின் 1972 அரசியலமைப்பும் ஒன்றே. இரு அரசியலமைப்புகளும் சோல்பரி அரசியலமைப்பின் 20 ஆம் பிரிவின் ஏற்பாடுகளை மீண்டும் ஏற்படுத்தவும் , நியம அங்கத்தவர் கோற்பாட்டை மீண்டும் கடைப்பிடிக்கவும்,செனட் சபையை மீண்டும் கொண்டுவரவும் வேண்டுமென்றே தவறின. இலங்கை முஸ்லீம்கள் இந்நாட்டில் ஒரு நூற்றாண்டு காலத்துக்கு மேலாக அனுபவித்துவந்த உரிமைகளைப் பாரதூரமாக பாதித்த ஐ.தே.க.வின் தார்மீக அரசியலமைப்பின் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை. தேர்தல் தொகுதிகளின் மீள்வரைவு மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவத் தேர்தல் முறை போன்ற ஏற்பாடுகள் நாசகரமானவையாகும் .